தடையை மீறி பட்டாசு வெடித்த 80 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

செவ்வாய், 6 நவம்பர் 2018 (14:57 IST)
தமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 80  பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 முதல் 8 மணு வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். இந்த தீர்ப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என போலீஸார் எச்சரித்திருந்தனர்.
 
இந்நிலையில் இன்று தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் சிறுவர்கள் ஆர்வ மிகுதியில் நீதிமன்றத்தில் தீர்ப்பை பின்பற்றாமல் பட்டாசு வெடித்து வருகின்றனர்.
 
அவ்வாறு தமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக திருப்பூர், கோவை மற்றும் நெல்லையில் 13 கைது செய்ய்ப்பட்டுள்ளனர். சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 78 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்