அதன் பின்னர் காட்பாடியில் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என அப்போது முதலே யூகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.
இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மேலும், காலை 10 மணிக்கு மேல் அவசர வழக்காக இதை விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது தேர்தல் ரத்துக்கு எதிராக வேட்பாளர்கள் இதில் அதிமுக ஏசி சண்முகம், , சுயேட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று மாலை 4:30 மணிக்கு தீர்ப்பளிக்கின்றனர்.