பச்சோந்தியாக மாறிய தமிழ் சினிமாக்காரர்கள்

வியாழன், 14 செப்டம்பர் 2017 (12:34 IST)
காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் சினிமாக்காரர்கள் செய்வார்கள் என்ற கூற்று உண்மையாகியிருக்கிறது.


 

 
தமிழை வளர்ப்பதற்காக, ‘தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு’ என அறிவித்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அடுத்து வந்த ஜெயலலிதாவும், அதில் சில திருத்தங்களை மட்டுமே செய்து வரிவிலக்கைக் கடைப்பிடித்தார். எனவே, வரிவிலக்குக்காக எல்லோரும் தமிழில் பெயர்வைக்க ஆரம்பித்தனர். ‘மாஸ்’ படம் ‘மாசு என்ற மாசிலாமணி’யாகவும், ‘பவர் பாண்டி’ படம் ‘ப.பாண்டி’யாகவும் ஆனது.
 
ஆனால், நாடு முழுவதும் ஒரே வரி (ஜி.எஸ்.டி) என்ற முறை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால், ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போக்கு மறுபடியும் ஆரம்பித்துவிட்டது.
 
அதில், அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர்களும் சேர்ந்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. விஜய் படத்துக்கு ‘மெர்சல்’ எனவும், விஜய் சேதுபதி படத்துக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ எனவும் பெயர் வைத்துள்ளனர். ஆக, இத்தனை நாட்களாக வரிவிலக்குக்காக தமிழில் பெயர்வைத்து, இப்போது இல்லை என்றதும் பச்சோந்தியாக மாறிவிட்டனர் சினிமாக்காரர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்