எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
ஆர்கே சண்முகம் 1980-ல் கலைமாமணி விருது பெற்றுள்ளார். எம்ஜிஆர்தான் லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டை பரிசாக வழங்கினார். அந்த வீட்டில்தான் ஆர்கே சண்முகம் உயிர் நேற்று பிரிந்தது. ஆர் கே சண்முகத்துக்கு மனைவி தேவி (75), நான்கு மகள்கள் உள்ளனர்.