ஒரே ஒரு வார்த்தையால் சென்சாரில் சிக்கிய படம்

வியாழன், 14 செப்டம்பர் 2017 (11:17 IST)
ஒரே ஒரு வார்த்தையால் சென்சாரில் சிக்கிய படம், ரிவைஸிங் கமிட்டியால் அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது.

 
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், ‘ஒரு பக்க கதை’ படத்தை இயக்கியுள்ளார்.  மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள இந்தப் படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படம் தயாராகி பல வருடங்கள் ஆகிறது.
 
ஒருவழியாக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடித்து சென்சாருக்கு அனுப்பியபோது, படத்தில் இடம்பெற்றுள்ள ‘இண்டர்கோர்ஸ்’ என்ற வார்த்தையை அனுமதிக்க சென்சார் அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். எனவே, ரிவைஸிங் கமிட்டிக்கு படக்குழு அப்ளை செய்ய, அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அத்துடன்,  படத்துக்கு ‘யு’ சான்றிதழும் அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்