மகன் கைதால் ஷாருக் கானின் விளம்பரங்களை நிறுத்திய முன்னணி நிறுவனம்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (15:34 IST)
நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை இறங்கினர். 

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் டை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் ஒருவன். 

இதனால் கடந்த சில தினங்களாக ஷாருக் கானின் பெயர் எதிர்மறையாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் ஷாருக் கான் நடித்த கல்வி சம்மந்தமான விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதை இப்போது நிறுத்தியுள்ளது. பைஜூஸின் இந்திய முகமாக ஷாருக் கான் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்