விஜய் 62: 2.0 படத்தை விட பிரமாண்டம், லைகா திட்டம்

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (23:59 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அவருடைய அடுத்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன



 


இந்த நிலையில் 'விஜய் 62' படத்தை '2.0' படத்தை விட பிரமாண்டமாக தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்துள்ளதாம். ரஜினியின் 2.0' படமே ரூ.450 கோடி பட்ஜெட் என்ற நிலையில் 'தளபதி 62' திரைப்படம் அதைவிட அதிக பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாம்

'பாகுபலி 2' படத்தின் வெற்றி தான் லைகாவின் இந்த முடிவுக்கு காரணம் என்றும், இந்த படம் விஜய்க்கும், ஏ.ஆர்.முருகதாசுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் 'விஜய் 62' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியானால்தான் உண்மை தெரியவரும்
அடுத்த கட்டுரையில்