சின்னப் பையன் கூட முறைக்கிறான்… விஜய் குறித்த பேச்சுக்கு பதிலளித்த போஸ் வெங்கட்!

vinoth
புதன், 27 நவம்பர் 2024 (10:57 IST)
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. மாநாட்டில் விஜய் 40 நிமிடத்துக்கும் மேல் உரையாற்றினார். அவர் பேச்சில் திமுகவையும், அதன் தலைமையையும் மறைமுகமாக விமர்சித்தார்.

விஜய்யின் பேச்சைக் கிண்டலடித்த திமுகவைச் சேர்ந்த நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் எக்ஸ் தளப் பக்கத்தில் “யப்பா… உன் கூடவா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி, வியப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு??? பாப்போம்” என எதிர்வினையாற்றி இருந்தார்.அவரின் இத்தகைய தரம்தாழ்ந்த பேச்சுக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து இப்போது பேசியுள்ள போஸ் வெங்கட் “விஜய் பேச்சைப் பலமுறைக் கேட்டபிறகுதான் நான் அப்படி ட்வீட் பண்ணினேன். ஆனால் அதன் பிறகு ரோட்டில் போனால் சின்ன பையன் கூட முறைக்கிறான். அவன் விஜய் ரசிகன்தான் என்பது தெரிகிறது.  நானும் விஜய் ரசிகன்தான். அவர் படத்தை முதல் நாளேப் பார்ப்பேன். ஆனால் அரசியல் என்பது வேறு. நான் அரசியல் களத்தில் அவரை எதிர்த்துப் பேசினேன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்