பாலிவுட் நடிகர் ரம்பீர் கபூருக்கு கொரோனா! – பாலிவுட் வட்டாரம் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (13:03 IST)
பாலிவுட் சினிமாவின் இளம் நடிகர் ரன்பீர் கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பர்ஃபி, ஜக்கா ஜசூஸ், ஹே ஜ்வானி ஹே திவானி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ரன்பீர் கபூர். இவர் சமீபத்தில் மறைந்த பழம்பெறும் இந்தி நடிகர் ரிஷி கபூரின் மகன்.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரன்பீர் கபூரை சோதித்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதை அவரது தாயார் நீத்து கபூர் உறுதி செய்துள்ளார். தற்போது ரன்பீர் கபூர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்