ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத விஜய் ரசிகர்கள்: புளூசட்டை மாறன் கண்டனம்..!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:39 IST)
விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரைலர் நேற்று சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில் இந்த ட்ரெய்லரை பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் சீட்டின் மீது ஏறி நின்று குதித்ததால், திரையரங்கில் உள்ள பல சீட்டுகள் பழுதடைந்து 
 
இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து  திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் கூறிய போது, ‘படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்' - 90s and 2K Boomers.
 
ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத.. உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை.. பாத்து மொத்த தமிழர்களும், இதர மாநில மக்களும் சிரிப்பா சிரிக்கறாங்க.
 
இதுல ரெண்டரை மணிநேர படம் பாத்துட்டு.. கெட்டுப்போகாம.. ஒழுங்கா இருப்பாங்களாம். செம காமடிடா!!
 
இப்படி பெரிய பொருட்சேதம் உண்டாக்குற அளவுக்கு சினிமா பைத்தியம் முத்திப்போன உங்களுக்கு.. வீட்லயும், ஸ்கூல், காலேஜ், வேலை செய்ற எடத்துல.. ஒருத்தரும் புத்தி சொல்ல மாட்டாங்களா?
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்