எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் வாடை ஹெவியா அடிக்குதே… லியோ டிரைலரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

வெள்ளி, 6 அக்டோபர் 2023 (07:33 IST)
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரின் கதையோட்டத்தை வைத்துப் பார்க்கும் போது இது எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் ரீமேக்தானோ என்ற சந்தேகம் உறுதியாகியுள்ளது.

லியோ படம் தொடங்கும்போதே பல ஊடகங்களில் இது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்பட்டது. அதை இப்போது இந்த டிரைலர் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்