காதலருடன் கோயிலுக்கு சென்ற நயன்தாரா – அங்கு நடந்த எதிர்பாராத சந்திப்பு !

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (14:22 IST)
தனது காதலருடன் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாராவை பாஜகவில் சேர சொல்லி முன்னாள் எம்பி நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு தற்போது தமிழகத்தில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாஜகவின் முன்னாள் எம்பி.. நரசிம்மனும் வழிபாடு செய்ய இருவரும் சந்தித்துக் கொண்டனர்.  நயந்தாராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நரசிம்மன் நயன்தாராவை பாஜகவில் சேர அழைப்பு விடுத்துள்ளார். நயன்தாராவும் அவருக்கு புன்னகை பூத்தபடியே பார்க்கலாம் பதிலளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்