ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்த பிந்து; வெறுக்க தொடங்கிய காயத்ரி குரூப்!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (18:13 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியால் ஓவியாவின் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். திடீரென்று  ஓவியாவுக்கு என்ன ஆனது, அவர் இப்படி கிடையாதே என்றும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

 
 
இந்த வாரம் புதிதாக வந்துள்ள பிந்து மாதவி, ஓவியாவிற்கு நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்பதால், ஓவியா ரசிகர்களுக்கு  அது சந்தோஷத்தை அளிதுள்ளது. அதன்படி ஒரு முறை ஜூலி, காயத்ரி, ரைசா ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து  கொண்டு பாட்டு பாடி, ஓவியாவை கிண்டல் செய்தனர். காயத்ரி பாடியபோது அங்கு வந்த பிந்து மாதவி, ஏன் இப்படி உள்குத்து இருப்பது போல பாடுகிறீர்கள் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் காயத்ரியை தொடர்ந்து ஜூலியும் ரைசாவும்  அங்கிருந்து சென்று விட்டனர். 
 
இவ்வாறு வந்தது முதலே ஓவியாவிற்கு பிந்து மாதவி சப்போர்ட் செய்ய ஆரம்பித்தது மற்றவர்களை எரிச்சல் அடைய  வைத்துள்ளது. இதனால் காயத்ரி, ரைசா மற்றும் ஜூலி ஆகியோர் பிந்து மாதவியை இப்போதே வெறுத்து ஒதுக்க ஆரம்பித்து  விட்டனர்.
அடுத்த கட்டுரையில்