ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தில் ‘பிகில்’ நடிகை!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (07:46 IST)
ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
ஜிவி பிரகாஷ் தற்போது ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பாதிக்கு மேல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை அடுத்து மீண்டும் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் 
 
இந்த படத்தில் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஆனந்தராஜ் நடிக்க இருப்பதாகவும் பிக்பாஸ் நட்சத்திரங்களான டேனியல் போப் மற்றும் ரேஷ்மா ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்