லண்டன் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட சாண்டி போலீசிடம் சிக்கிய மூமென்ட்...
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தருபவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்துவரும் நேரத்தில் சாண்டி லண்டன் சென்றுள்ளார். அங்கு நடுரோட்டில் லுங்கி, பனியனுடன் ரஜினியின் பேட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். உடனே அங்கு போலீஸ் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும் அப்படியே பேக் அடித்து லுங்கியை கழட்டி முகத்தை மறைத்தபடி ஓடிவந்துவிட்டார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு " ஐயோ போலீசு.... லண்டனில் ஃபன் டைம் என கூறி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.