’பிக்பாஸ் 3’ நடிகை 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (16:38 IST)
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மசாலா படம்’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு இரண்டு திருமணம் நடைபெற்றதாகவும் இரண்டு திருமணமும் துரதிஷ்டவசமாக ஃபெயிலியர் ஆகி விட்டதாகவும் அவர் உணர்ச்சியுடன் கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் மறைந்த தனது மகனின் கல்லறையை பார்ப்பதற்காக அவ்வப்போது அமெரிக்கா சென்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தது மிகவும் உருக்கமாக இருந்தது.
 
இந்த நிலையில் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ளவர்தான் ரேஷ்மாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ரேஷ்மா தனது மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ரேஷ்மா இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Life is too short. Spend it with people who make you laugh & feel loved

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்