இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பிறந்ததாகவும். ஆனால் அந்த குழந்தை சில நாட்களில் இறந்துவிட்டது எனவும் கூறினார்.
இந்நிலையில் தற்போது ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராமில் "வாழ்க்கை மிகவும் குறுகலானது. அதனை உங்களை சிரிக்க வைத்து உங்களிடம் அன்பும் காட்டும் நபருடன் செலவழியுங்க" என்று கூறி ஆண் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் இந்த புகைப்படத்தில் இருப்பவர் உங்களது காதலரா? இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறீர்களா..? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால். தற்போது வரை எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கலாமல் இருந்து வருகிறார் ரேஷ்மா.