சிம்பு இசையில் படகராக மாறிய பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (14:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுக்கு சிம்பு இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண் சிம்பு போன்று நடித்து அசத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிபோது சிம்புவிடம் இருந்து புத்தகம் ஒன்ரை பரிசாக பெற்றார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெளியேறிய ஆரவ், ரைசா, ஒவியா, ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு படங்களில் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஹரிஷ் கல்யாண் வெளியே நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் இடங்களில் எல்லாம் தற்போது பாட்டு பாடி வருகிறார்.
 
இந்நிலையில் அவருக்கு சிம்பு இசையமைக்கும் படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு சிம்பு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சந்தானம் நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு இசையமைத்து வருகிறார். அதில் இடம்பெறும் ஒருபாடலை ஹரிஷ் கல்யாண் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்