பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (08:54 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?
பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய 14ஆம் நாளில் முதல் போட்டியாளராக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அர்ச்சனாவின் வருகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 பேர் உள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலின்படி போட்டியாளர்களின் சம்பளம் பின்வருமாறு”
 
ரம்யா பாண்டியன், அர்ச்சனா, ஆரி, ரமேஷ், நிஷா, ஷிவானி மற்றும் ரியோ ஆகியோர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் சம்பளமாம். அதேபோல் சனம்ஷெட்டி, ரேகா, சம்யுக்தா, சுரேஷ், பாலாஜி, மற்றும் வேல்முருகன் ஆகியோர்களுக்கு தினமும் ரூ.1.5 லட்சம் சம்பளமாம். மேலும் அனிதா சம்பத், கேப்ரில்லா, சோம்சேகர், ஆஜித் ஆகியோர்களுக்கு தினமும் ஒரு லட்சம் சம்பளம் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்