பிக்பாஸ் தமிழ் நடிகைக்கு டாக்டர் பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (09:10 IST)
பிக்பாஸ் தமிழ் நடிகைக்கு டாக்டர் பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் நடிகை ஒருவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான அபிராமி வெங்கடாச்சலம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது
 
பரதநாட்டிய நடனக்கலையில் அவர் செய்த சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த டாக்டர் பட்டத்தை அன்னை தெரசா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
இது குறித்த புகைப்படங்களை நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்