பழம்பெரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (08:46 IST)
பழம்பெரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கார்த்திக், நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் முத்துராமன் என்பவர் சற்றுமுன் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது
 
பழம்பெரும் தயாரிப்பாளர் முத்துராமன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் துரை இயக்கத்தில் உருவான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தை தயாரித்தது முத்துராமம் அவர்கள் தான் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மறைந்த தயாரிப்பாளர் எம் முத்துராமன் அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்