மகள் அனுப்பிய அன்பு பரிசு! தாடிபாலாஜி கண்ணீர்... புதிய பிக்பாஸ் ப்ரேமோ

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (13:03 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க விறுவிறுப்பாக செல்கிறது. இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள காட்சிகள் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

 
அதில் தாடி பாலாஜிக்கு ஒரு  கிப்ட் மற்றும் அத்துடன் கடிதம் மனைவி மற்றும் மகளிடம் வந்துள்ளதாக  காட்டுகிறார்கள். அந்த கடிதத்தை ஜனனி படிக்கிறார். அதில், அன்புள்ள தந்தையை நீங்கள் வென்று வாருங்கள் என்று  கூறப்பட்டுள்ளது.
 
அவரது மனைவி நித்யா அனுப்பியுள்ள கடிதத்தில்  யாரை பற்றியும் பின்னால் பேசவேண்டாம், உங்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மகள் அனுப்பிய கிப்ட்டில் பொம்மை அனுப்பட்டுள்ளதை பிரித்து கண் கலங்குகிறார் பாலாஜி.  நாள் முழுவதும் கண்ணீருடன் சோகமாக இருப்பதுடன், அவரை சகபோட்டியாளர்கள் தேற்றுகிறார், இவ்வாறு ப்ரோமோ முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்