இன்று அவரது இறுதி சடங்குகள் மலேசியாவில் உள்ள இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த சம்பவத்தால் முகின் ராவ்வின் ரசிகர்கள், நண்பர்கள், உடன் பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது தோழியான பிக்பாஸ் அபிராமி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ”உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் பிரகாஷ் ராவ். தைரியமாக இரு பேபி” என முகினுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.