பிக்பாஸ் போட்டியாளர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் ப்ரொமோவில், விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஓவியாவையும், ஆரவையும் பேச விட்டுள்ளார்கள். ஓவியாவை நேருக்கு நேர் பார்த்த ஆரவ் ஒரு கேள்வி கேட்டுள்ளார். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ஆரவ் கேட்க, ரொம்ப நல்லா இருக்கு என்கிறார் ஓவியா. மேலும் கேரள கல்லூரி பெண் ஷெரில் ஆடிய, வைரல் ஆன ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு, நடிகை ஒவியா நடனம் ஆடி அசத்தியுள்ளார்.
ஆர்த்திதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான ஆள். ஏன் என்றால் அவர் குண்டாக இருப்பதால் அவரால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரை கலாய்த்துள்ளனர்.