அழகு பதுமையாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் கிருத்தி ஷெட்டி!

செவ்வாய், 11 ஜூலை 2023 (21:05 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர், இந்தியில் சூப்பர் 30 என்ற படத்திலும் தெலுங்கில் உப்பெனா என்ற படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின்னர், ஷ்யாம் சிங்கா ராய், பங்கா ராஜூ, தி வாரியர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் அவர் நடிப்பில் கஸ்டரி படம் வெளியானது.  இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள ஜீனி படத்தில் ஹீரோயினாக நடிக்க மூன்று ஹீரோயின்களில் ஒருவராக  ஒப்பந்தமாகியுள்ளார். அண்மையில் கூட தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை தருவதாகவும், பட விழாக்களுக்கு அவரை  வர வைப்பதாகவும் இது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் தற்ப்போது தனது சமூகவலைத்தளத்தில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கியூட்டான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்