சண்டைகளின் மையப்புள்ளியாக திவாகர் என்ற போட்டியாளர் மாறியுள்ளார். முதல் நாளன்று, 'பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அல்லவா?' என்ற விவாதம் திவாகருக்கும் கெமிக்கும் இடையே மோதலில் முடிந்தது. மறுநாள் காலையில், குரட்டை விவகாரம் தொடர்பாக பிரவீனுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ப்ரோமோவில், திவாகருக்கும் ரம்யாவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்தது. ரம்யா பதிலடி கொடுக்க, கோபமடைந்த திவாகர், "நீயெல்லாம் படித்து இருக்கிறாயா, இல்லையா?" என்று தரக்குறைவாகக் கேள்வி எழுப்பினார்.
திவாகரின் தொடர் ஆக்ரோஷத்தால் எரிச்சலடைந்த சக போட்டியாளர்கள், ரம்யாவுக்கு ஆதரவாகத் திரண்டு திவாகருடன் மோதினர். அப்போது, பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. திவாகரை அடிக்கக் கை ஓங்குவது போன்றும், கம்ரூதின் அவரைத் தள்ளிவிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.