காதல் தோல்வியில் பெண்களின் வலி தெரிவதில்லை… ராஷ்மிகா மந்தனா கருத்து!

vinoth

புதன், 22 அக்டோபர் 2025 (10:50 IST)
கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக உயர்ந்து கலக்கி வருகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.

தற்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் இன்று இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக ராஷ்மிகா இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அவர் தற்போது கன்னட திரையுலகை மதிக்காமல், அவமரியாதை செய்வதாக அவர் மீதுக் குற்றச்சாட்டும் உள்ளது.

ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘கேர்ள் ஃப்ரண்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணணப் பற்றியக் கதையாக உருவாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் காதல் தோல்வியில் பெண்களின் வலி யாருக்கும் தெரிவதில்லை எனப் பேசியுள்ளார். அதில் “காதல் தோல்விகளில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் தங்கள் வலியை வெளிப்படுத்த தாடி வளர்க்க முடியாது.  அவர்கள் உள்ளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை வெளியில் காட்ட முடியாது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்