சமூக வலைத்தளங்களில் பிரபலமான நடிகர் திவாகர் மீது, நடிகை ஷகிலா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், திவாகர் சாதி ரீதியான கருத்துக்களை பேசி சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கவின் ஆணவக்கொலையை நியாயப்படுத்தியும், சாதி ரீதியான வெறுப்பு பேச்சுகளை பேசியும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க திவாகர் முயற்சிப்பதாக ஷகிலா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஷகிலா கோரிக்கை விடுத்துள்ளார்.