அதான் கனெக்ட் ஆகிட்டயே அப்புறம் என்ன ! கவின் இல்லனா தான் அப்பா நியாபகம் வருமா..?

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (16:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 100-வது நாள் ஆகிறது. எனவே இந்த வாரத்துடன் இந்த சீசன் முடிவடையவுள்ளது. லொஸ்லியா, முகின் , சாண்டி , ஷெரின் உள்ளிட்டோர் வீட்டிலிருக்கின்றனர். இவர்களின் ஷெரின் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என பெரும்பாலான மக்களால் கணிக்கப்பட்டு வருகிறது. மற்ற மூன்று பேரில் முகின் அல்லது சாண்டி இருவரில் யாரேனும் ஒருவர் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டு வருகிறது. இதில் லொஸ்லியா வின் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கு. 


 
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளிவந்துள்ளது. இதில் லொஸ்லியா " இந்த வீட்டிற்கு வரும் போது நான் இரண்டு விஷயங்களை யோசித்தேன் ஒன்று, யாருடனும் ரொம்ப ஓவரா கனெக்ட் ஆகா கூடாது, மற்றொன்று அழக்கூடாது என்பது தான். 
 
ஆனால், என் அப்பாவை இந்த வீட்டில் சந்தித்த போது அவர் என்னை அதீத அந்த அன்போடு கட்டியணைப்பார் என எதிர்பார்த்த வேளையில் " நீ என்ன பண்ணிட்டு இருக்கிற" என கேட்டார் அது எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்தது என கூறினார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் அதான் கனெக்ட் ஆகிட்டியே நல்லா அப்புறம் என்ன...? அவன் இல்லனா தான் உனக்கு அப்பா நியாபகமே வருமோ என கேட்டு கமென்ஸ்ட் செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்