இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

vinoth
திங்கள், 23 டிசம்பர் 2024 (09:20 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.

இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் எனவும், மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியின் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் நிறுவனத்துக்காக ராஜ்குமார் பெரியசாமி ஒரு இந்தி படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்