பண நெருக்கடியால் மீண்டும் சினிமா: திட்டிதீர்த்த பூமிகா....

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (18:04 IST)
நடிகை பூமிகா சில்லுனு ஒரு காதல், பத்ரி, ரோஜா கூட்டம் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். 2007 ஆம் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு வீட்டில் செட்டிலானார்.
 
தற்போது, பூமிகா மீண்டும் திரைதுறையில் தலைக்காட்ட ஆரம்பித்துள்ளார். பிரபு தேவாவுடன் களவாடிய பொழுதுகள் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.  
 
இந்நிலையில், பூமிகா கணவருடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்ததாகவும் அதனை சரிக்கட்டவே மீண்டும் படங்களில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து பூமிகாவிடம் கேட்ட போது கடும் கோபத்தில் பின்வருமாறு பதிலளித்துள்ளார். 
 
அடிப்படை ஆதாரமற்ற இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் பண நெருக்கடியிலும் இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்கள் எப்படி வருகின்றன என்பது தான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. 
 
பைனான்ஸ் பிரச்னையால்தான் நான் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன் என்பதில் உண்மை இல்லை. எனக்கு பட தயாரிப்பில் அனுபவம் இல்லாததால் இழப்பு ஏற்பட்டது. ஆனால் நல்ல படம் தயாரித்தேன் என்ற பெயர் எனக்கு கிடைத்திருக்கிறது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்