இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், ஊட்டியில் முடிந்துள்ளது. இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஆத்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. விரைவில், அடுத்த ஷெட்யூல் தொடங்க உள்ளது. இந்நிலையில், படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து கெளதம் மேனனும் தயாரிக்கிறார்.