முழு கதையையும் சொன்ன பாக்யராஜ் : சர்கார் படக்குழு அதிர்ச்சி...

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (10:36 IST)
சர்கார் கதையை பல்வேறு பேட்டிகளில் பாக்யராஜ் சொல்லி வருவது  படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
 
தீபாவளி அன்று (நவம்பர் 6) வெளியாக உள்ள  இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் ஶ்ரீ இந்நிலையில் சர்கார் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இதற்கிடையில் ’செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார்.
முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்தார்.
 
இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜ் சர்கார் கதை தொடர்பாக ஆன்லைன் மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்படி அளிக்கும் போது ஒரு பேட்டியில் ‘சர்கார்’ படத்தின் முழுக்கதையையும் சொல்லிவிட்டார் பாக்யராஜ். விஜய் எதற்காக வருவார், கதை எப்படி பயணிக்கும், க்ளைமாக்ஸ் என்ன என்பது வரை முற்றிலுமாக கூறியுள்ளார்
 
இந்தப் பேட்டி ‘சர்கார்’ படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்