கதைக்கும் காட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லையா முருகதாஸ் அவர்களே?

ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (12:15 IST)
சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் முருகதாஸ் குற்றத்தை மறுத்து தனது கதையை முழுமையாகப் படிக்காமல் ஒருதலை பட்சமாக தீர்ப்பளித்துள்ளதாக திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் மீது குற்றச்சாட்டு தெர்வித்துள்ளார்.

சர்கார் கதை திருட்டு சம்மந்தமாக உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த குற்றச்சாட்டைப் படித்த திரை எழுத்தாளர்கள் சங்கம் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று வருணுக்கு ஆதராவாக கடிதம் கொடுத்துள்ளது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக இயக்குனர் மீது ஏ ஆர் முருகதாஸ் ஒரு தனியார் இணையதள தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் ‘என்னுடைய முழுக்கதையையும் படிக்காமலேயே சங்கத்தினர் இந்த தண்டனையை எனக்குக் கொடுத்துள்ளனர். என்னுடைய கதை தற்போதைய காலத்தில் நடைபெற்று வரும் உண்மை சம்பவங்களான மீத்தேன் திட்டம், முதல்வரின் மறைவு மற்றும் தற்போதைய தொழில்நுட்பங்களான டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மற்றும் நிஜ மனிதர்களான கூகுள் CEO போன்றவர்களை மையப்படுத்தி உருவாக்கியுள்ளேன். இதை எப்படி ஒருவரால் 2007-ல் கதையாக எழுத முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.’

இதற்குப் பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் வருண் என்பவர் தனது கதை திருடப்பட்டுள்ளதாகதான் புகார் கொடுத்துள்ளார். நீங்களோ உங்கள் படத்தில் உள்ள காட்சிகளைப் பற்றி விளக்கிக் கொண்டு இருக்கீறீர்கள் மேலும் ஒரு கதை என்பதற்கும் திரைக்கதைக்கும் வித்தியாசம் இல்லையா எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். அவரது கதையைத் திருடி நீங்கள் உங்கள் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கலாம் என விமர்சித்து வருகின்றனர்.

இது சம்மந்தமாக பிரபல முகநூல் பதிவர் ஏ ஜி சிவக்குமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ‘ ஒரு Bike'அ திருடிட்டு அதே Area'ல ஒட்டுறவன், அப்படியே வா ஓட்டிட்டு கிடப்பான்??... கொஞ்சம் பட்டி, டிங்கரிங்'லாம் பாக்க தானே செய்வான்?. நீங்க சொல்ற மீத்தேன், முதல்வர் பிரச்சனை எல்லாம், மூலக்கதையா இல்லாமல், 2 (or) 3 காட்சியில் கடந்துபோகும் நிகழ்வாக இருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்