பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது பாலகிருஷ்ணா பட அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (08:22 IST)
நடிகர் பாலகிருஷ்ணாவின் 107 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் உகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இந்நிலையில் நேற்று அவரின் 61 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவரின் 107 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை கிராக் படத்தை இயக்கிய கோபிசந்த் மாலினேனி இயக்க உள்ளார். தற்காலிகமாக அந்த படத்துக்கு #NK107 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்