பாலாவின் வணங்கான் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அப்டேட்!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:16 IST)
சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார்.

இப்போது இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சென்னையில் வணங்கான் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

இதையடுத்து திருவண்ணாமலை மிக பிரம்மாண்டமான கிணறு செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் 10 நாட்கள் இறுதிகட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைவதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்