வர்மா படத்தால் ஏற்பட்ட அவமானம்! 16 வருடம் கழித்து விஸ்வரூபம் எடுக்கும் பாலா.!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (13:29 IST)
பாலா இயக்கத்தில் துருவ் நடித்த `வர்மா' படம் இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே பல்வேறு பரஸ்பர காரணங்களால் கைவிடப்பட்டது.


 
தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பாலா எடுத்திருந்த படம் தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் கை விடுகிறோம் என அறிவிப்பு வெளியிட்டனர்.  இதனால் தன் படைப்புச் சுதந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு வர்மா படத்திலிருந்து விலகியதாக பாலா தெரிவித்தார். 
 
தற்போது இந்த படம் வேறு ஒருவர் இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராக இருக்கிறது. ரீபூட் செய்யப்பட்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது.  
 
இந்நிலையில் வர்மா படத்தால் தனக்கு ஏற்பட்ட அவமானம் தாங்கமுடியாத பாலா ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாவதற்குள் தன்னுடைய இயக்கத்தில் வேறு ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறாராம். இதனால் விக்ரம் நடித்த ‘பிதாமகன்  படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான வேளைகளில் தீவிரம் காட்டிவருகிறாராம்.
 
கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. மேலும்  விக்ரமின் விசித்திர நடிப்பிற்கு தேசிய விருதும் கிடைத்து 


 
16 வருடம் கழித்து மீண்டும் பிதாமகன் படத்தை ஹிந்தியில்  ரீமேக் செய்யும்  இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்