என்னாது வர்மா படத்தை கைவிட்டுடாங்களா! அப்பாவியாக கேட்ட ஹீரோயின் ஷாக்!

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (18:34 IST)
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா கைவிடப்பட்டுள்ளது. பாலா இயக்கிய இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடித்திருந்தார். படம் முழுமையாக எடுத்து முதல் காப்பியை பார்த்த தயாரிப்பு நிறுவனம், தங்களுக்கு திருப்தி இல்லை என்றும், தெலுங்கில் இருப்பது போல் இல்லை என்றும் கூறி படத்தை கைவிடுவதாக அறிவித்தது 


 
இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து வேறு ஒரு இயக்குனர் வர்மாவை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வர்மா படம் கைவிடப்பட்ட தகவல் மேகா சவுத்ரிக்கு தெரியவில்லை. நீங்கள் நடித்த வர்மா படம் கைவிடப்பட்டுள்ளது பற்றி என்னை நினைக்கிறீர்கள் என்று கேட்டவர்களிடம் என்னது படம் கைவிடப்பட்டதா என்று அப்பாவியாக கேட்டுள்ளார் மேகா.
 
மீண்டும் எடுக்கப்பட உள்ள வர்மா படத்தில் துருவ் விக்ரம் தவிர அத்தனை பேரும் மாற்றப்படுகிறார்கள். ஹீரோயின் மேகாவும் மாற்றப்படுகிறார் என்பது கூடுதல் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்