பாகுபலி படத்தை நினைவுகூர்ந்த பிரபலங்கள்… அதுக்குள்ள 7 வருஷம் ஆயிடுச்சா?

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (09:19 IST)
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டு வெளியானது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம் பாகுபலி. இரு பாகங்களாக உருவான இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற பாகுபலி-1 அதன் அடுத்த பாகத்தின் இமாலய வெற்றிக்கு அடிக்கல்லாக அமைந்தது. சில ஆண்டுகள் கழித்து வெளியான பாகுபலி 2 திரைப்படம் இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை செய்த படமாக இன்றளவும் உள்ளது. இந்நிலையில் பாகுபலி முதல் பாகம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து படத்தில் பங்காற்றிய பிரபலங்கள் அனைவரும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்