மீண்டும் அஜித்திற்கு மகளான குழந்தை நட்சத்திரம்?

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (08:31 IST)
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவரது வளர்ப்பு மகளாக நடித்த பேபி அனிகா தற்போது மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடிக்க இருக்கிறார்.

அஜித் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தோடு மோதுகிறது.

இந்த படத்தில் அஜித்தோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  பேபி அனிகாஅஜித்தின் மகளாக நடிக்கிறார். விளையாட்டு வீரரக வர விரும்பும் அவரை உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பாசமிகு தந்தையாக அஜித் இந்த படத்தில் நடிக்கிறாராம். மேலும் அதிரடி சண்டைக் காட்சிகள அதிகம் இல்லாமல் படம் முழுவதும் நகைச்சுவை மற்றும் செண்ட்டிமெண்ட் நிரம்பி வழியும் குடும்பப் பொழுதுபோக்குப் படமாக விஸ்வாசம் உருவாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்