மனைவியின் தாய்ப்பாலை திருடிக் குடித்தாரா பிரபல பாலிவுட் நடிகர்?... புத்தகத்தால் கிளம்பிய சர்ச்சை!

vinoth
சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:44 IST)
பாலிவுட்டில் விக்கி டோனர், அந்தாதூன், ஆர்ட்டிகிள் 15 என அடுத்தடுத்து வரிசையாக வித்தியாசமான கதைக்களனை தேர்வு செய்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானவர் ஆயுஷ்மான் குர்ரானா. இதனால் அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகரானார்.

இந்நிலையில் இப்போது அவர் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவருக்கும் இவரின் காதலி தாஹிரா என்பவருக்கும் திருமணமாகி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் மனைவி தாஹிரா ஒரு எழுத்தாளர். இவர் சமீபத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் ஆயுஷ்மான் குறித்து ஒரு சர்ச்சையான விஷயத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் “என் கணவர் என்னுடைய தாய்ப்பாலை திருடி அதைத் தன்னுடைய ப்ரோட்டின் ஷேக்கில் கலந்து குடிக்கிறார். இதனால் நான் அவரிடம் இருந்து என்னுடைய தாய்ப்பாலை ஒளித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” எனப் பதிவு செய்துள்ளார். இது சர்ச்சைகளைக் கிளப்ப இது சம்மந்தமாக கேள்விக்கு பதிலளித்த ஆயுஷ்மான் “என்னுடைய சொந்த விசயம் பற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்