அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு? வெளியான தகவல்!

vinoth
சனி, 13 ஜனவரி 2024 (08:04 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி நேற்று ரிலீஸ் ஆனது.

நேற்று கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான்  வின்னர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அயலான் படத்தின் முதல் நாள் உலகளாவிய கலெக்‌ஷன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் இந்த படம் 5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் படம் பற்றிய பாசிட்டிவான விமர்சனங்களால் வரும் நாட்களில் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்