இந்தியாவில் 200 கோடி கலெக்‌ஷனைத் தாண்டிய அவதார் 2!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:20 IST)
அவதார் 2 திரைப்படம் இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாயைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்தியாவில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையிலான ஷேர் பிரிப்பதில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் சில திரையரங்குகளில் அவதார் 2 ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. உலகளவில் படத்தின் வசூல் 4000 கோடியை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்