விஜய் சேதுபதி மீது தாக்குதல்? போலீஸார் விளக்கம்

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (22:38 IST)
பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை ஒரு நபர் தாக்கியதாக  ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் விமான நிலையத்திற்கு சென்றபோது, அங்கு நடிகர் விஜய்சேதுபதியை ஒரு நபர் வந்து உதைத்ததாகக் கூறப்பட்டது.

இது அங்குள்ளவர்களால் வீடியோவகப் பதிவு செய்யப்பட்டதால் உடனே இணையதளத்தில் வைரல் ஆனது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என போலீஸார் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கூறியுள்ளதாவது:   விமானத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜய்சேதுபதியுடன் சென்ற நண்பர் மகா காந்தியை ஜான்சன் என்ற சக பயணி  விமான நிலையத்திற்கு வெளியே வந்ததும் தாக்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்