9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

vinoth
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:36 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் சல்மான் கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஒன்பது மொழிகளில் உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் முன்னணிக் கலைஞர்களின் சம்பளம் எல்லாம் இல்லாமல்  ஷூட்டிங் பட்ஜெட் மற்றும் 250 கோடி ரூபாய் ஆகும் என தயாரிப்புத் தரப்புக்குக் கூறியுள்ளாராம் அட்லி.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்