முத்தம் கொடுத்த ப்ரியா, கன்னத்தை கிள்ளிய அட்லி: ;குட்டிக்கதை’ காதல்

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2020 (07:30 IST)
முத்தம் கொடுத்த ப்ரியா, கன்னத்தை கிள்ளிய அட்லி
தளபதி விஜய் நடித்த ‘தெறி’, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஷாருக்கானுக்கு ஒரு கதை கூறியுள்ளதாகவும் ஷாருக்கானின் அடுத்த படத்தை அட்லி இயக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் விஜய் மற்றும் அவரது மனைவி ப்ரியா காதலர் தினத்தை நேற்று சிறப்பாக கொண்டாடினர். நேற்று பிரியாஅட்லி தனது சமூக வலைத்தளத்தில் அட்லீக்கு முத்தம் கொடுத்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் நேற்று விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி கதை பாடல் இடம் பெற்ற ஒரு வரியையும் குறிப்பிட்டுள்ளார் 
 
அதேபோல் அட்லீ, பிரியாவின் கன்னத்தை கிள்ளியவாறு ஒரு புகைப்படத்தை பதிவு செய்து மாஸ்டர் படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காதலர் தினத்தில் காதலர்களான அட்லி-பிரியா தம்பதியினர் விஜய்யின் மாஸ்டர் பட பாடலை வைத்து கொண்டாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அட்லி, பிரியா மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்கள் குட்டிக்கதை பாடலுக்கு தங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்