அடுத்தடுத்த மாதங்களில் அதர்வாவின் 2 படங்கள் ரிலீஸ்!

புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:39 IST)
அதர்வா நடித்த குருதி ஆட்டம் என்ற திரைப்படம் இம்மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்த இன்னொரு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து அடுத்தடுத்த மாதங்களில் அதர்வாவின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதர்வா நடித்த குறுதியாட்டம் என்ற அதிரடித் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
 
 இந்த நிலையில் அதர்வாவின் மற்றொரு படமான ‘டிரிக்கர்’ என்ற படம் அடுத்த மாதம் வெளியாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் என்ற படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்