இதையடுத்து இதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் அஸ்வத் மாரிமுத்து. மேலும் விரைவில் இந்தியிலும் இதே படத்தை அவர் இயக்க உள்ளார். இந்நிலையில் இப்போது தமிழ் தெலுங்கில் உருவாகும் பேண்டஸி படத்தை தில் ராஜு தயாரிப்பில் இயக்க உள்ளார் அஸ்வத். இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.