பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 4 பேர் காப்பாற்றப்பட்டனர். கடைசியாக மகேஸ்வரி, அசீம், அசல் ஆகிய மூன்று பேர்களில் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டிய நிலை இருந்தது
அசீம் கூறியபோது நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன், அதனால் நான் வெளியே போக வாய்ப்பு உள்ளது, மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்
கடைசியாக அசல் கூறியபோது நான் என்ன செய்தேன், மக்கள் எதற்காக இங்கே உட்கார வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். அப்போது நிவாஷினியிடம் கமல்ஹாசன் அசல் இருப்பாரா என்று கேட்டதற்கு கண்டிப்பாக இருப்பார் இருக்கணும் என்று கூறினார்