12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.
இந்த நிலையில் பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.